திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

22/03/2022
எனதருமைச் சகோதரியின் பிறந்தநாள்
நினைவில்

என்னுயிர் நீயன்றோ
“””””””””””””””””
என்னரும் அழகே என்னுயிர் நீயே
பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே
இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
என்முகம் காட்டிய என்னுடன் பிறப்பே
கன்னலுன் வார்த்தை கனவிலும் காணேன்
பின்னொரு பிறவி பிரியா வாழ்க்கை
தன்னிகர் இல்லாத் தாயாய் வருக
பன்னெடுங் காலம் பாசமாய் வாழ
அன்புடன் உனக்கே அனைத்தும் நல்கிட
உன்பிறப் பிங்கே உவந்திட வருகவே.

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.

எனதருமைச் சகோதரியின்
நினைவில்

என்னுயிர் நீயன்றோ
“””””””””””””””””
என்னரும் அழகே என்னுயிர் நீயே
பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே
இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
என்முகம் காட்டிய என்னுடன் பிறப்பே
கன்னலுன் வார்த்தை கனவிலும் காணேன்
பின்னொரு பிறவி பிரியா வாழ்க்கை
தன்னிகர் இல்லாத் தாயாய் வருக
பன்னெடுங் காலம் பாசமாய் வாழ
அன்புடன் உனக்கே அனைத்தும் நல்கிட
உன்பிறப் பிங்கே உவந்திட வருகவே.

.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading