08
Oct
வசந்தா ஜெகதீசன்
காலமெனும் உருளி காட்டும் திரை விலகி
ஞாலமெனும் தொகுதி
ஆற்றும் பல தகுதி
வாழ்வு என்னும்...
08
Oct
ஒன்றியே வாழ்வோம்
நகுலா சிவநாதன்
ஒன்றியே வாழ்வோம்
மாமழை பெய்யுது மனமது நிறையுது
பூமழைபோலே கொட்டுது நீரும்
வேரது மகிழுது வெந்தணல்...
08
Oct
மறவர்குலத்தின் மாதரசி…..
ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026
முத்துக்கள் நிறைந்த தீவாம்
எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில்
மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க
மண்ணிற்காய்...
திருமதி செ. தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் கமலாக்கா,பாவையண்ணா!
சந்தம் சிந்தும் சந்திப்பு- 246.
நிலவுடன் உலா
“””””””””””””””
காய் மா மா விளம்
காய் மா காய்
ஆதியிலே யன்னை அன்னத்தை ஊட்டிட
அங்கிருந்தே யென்னை ஈர்த்தவளே
சோதியினா லென்றன் சிந்தை குளிர்ந்திட
சொர்க்கமென்றே மாயம் செய்தவளே
பாதியிலே நாங்கள் பார்த்துக் களிக்கையில்
பஞ்சுமுகி லுக்குள் பாய்ந்தவளே
தோதிலையே உன்றன் தோற்றம் மறைப்பதே
தோழியென்றே வாழ்வில் வந்தவளே!
வான்வழிநீ வந்து வாவென் றழைக்கையில்
வண்ணத்த மிழமு தூறிடுமே
தேன்மொழியா லுன்றன் தேகம் பொலிந்ததோ
தென்றலும்முன் வந்து பேசியதோ
கூன்மதியே யிங்கு குற்றம் இலாததோர்
கோமகனா ரிங்கே கூறிடுவாய்
வான்வழிவந் தவுன தன்பர் அனைவரின்
வாய்மொழிகேட் டிங்கே மீட்டளிப்பாய்!
திருமதி
செ. தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
19-12-2023.
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...