துளிர்ப்பாகும் வசந்தம்

துளிர்ப்பாகும் வசந்தம் (709)

காலத்தின் மாற்றமதில்
கோடையும் மாரியும்
ஞாலத்தின் தோற்றமதில்
குளிராயும் வெயிலாயும்

அழகான மரங்களும்
அடையாளம் களைந்து
அனுதினம் உதிர்த்து
அழிந்து போவதும்

தளிர் உயிர்ப்பாகி
குளிர் மறைவாகி
வெளிர் வரவாகி
மலர் பிறப்பாகி

வசந்தம் வந்தாலே
அகமும் மகிழ்வு
சுகந்தம் நிலைதனில்
துளிர்ப்பாகும் சிறப்பு

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading