” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

துவாரகன் ஷாமினி

மூடிய கண்கள்
திறக்கவில்லை
குனிந்த தலை
நிமிரவில்லை
கட்டப்பட்ட கைகளும்
அவிழ்க்கப்படவில்லை…

வாய்ப் பேச்சுக்கள்
சபை ஏறவில்லை
உண்ணா விரதங்கள்
கை கூடவில்லை
மெளன விரதங்களும்
கலைக்கப்படவில்லை…

தீச்சுடர்கள்
வெளிச்சம் தரவில்லை
மெழுகு திரிகள்
சுடரவில்லை
மின் விளக்குகளும்
ஒளி கொடுக்கவில்லை…

மாற்றங்கள்
நடக்கவில்லை
நம்பிக்கைகள்
இழக்கப்படவில்லை
கேள்விகள்
தொடுக்கின்றோம்
விடியுமா தேசம்???

-துவாரகன் சாமினி-
24.09.2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading