நான்யாரு (730)

நான்யாரு செல்வி நித்தியானந்தன்
புதருக்கு வெளியே உம் பிறப்பு
புயல்மழையில் குடை விரிப்பு
பூ காய் இலை இல்லா தரிப்பு
பூஞ்சை தாவரமாய் இதன் சிறப்பு
ஆசியாவிலே அதிக வகை வளர்ப்பு
ஆரோக்கியம் கொண்டதாய் இதனிருப்பு
ஆயிரத்திற்க்கு மேலே இனச் சேர்ப்பு
அரிய வகை நோய்களுக்கு உயிர்ப்பு
புற்றுநோய், இரத்தசோகை நோய் எதிர்ப்பு
புரதம் மற்றும் எண்வகை சத்து இருப்பு
புலால் உணவுக்கு மாற்றான விருப்பு
புவியிலே மெல்லிய இழைகளின் உருவகிப்பு
ஜரோப்பா உணவில் பலவகை மதிப்பு
ஜயுரவாய் சிலரடை தட்டியும் கழிப்பு
ஐப்பான் சீனாவிலும் உண்ணல் அதிகரிப்பு
ஐந்துவகையே ஆரோக்கிய வாழ்வுக்கு சிறப்பே

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading