ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

“நான் நானாக”

நேவிஸ் பிலிப் கவி இல்(416)
நான் நானாகி
மனதளவில் தோப்பாகி
எதிர் பார்ப்பு ஏதுமின்றி
செழித்தே நான் வளர்ந்திடுவேன்

எனக்கு நானேயென
என் முனங்கல் இசையாக
எனக்கென ஓர் உலகம்
என்னைச் சுற்றி அமைத்திடுவேன்

எ்னை நாடி வருவோரை
அனபோடு அணைத்திடுவேன்
மனம் நோகா வண்ணம்
எந்நாளும் காத்திடுவேன்

என் கவலை என்னோடு
இடர் வரினும் கலங்க மாட்டேன்
நடப்பது நடக்கட்டும்
அடுத்தவர் வார்த்தையில்
நோக மாட்டேன்
நான் நானாக இருக்கும் வரை
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading