இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…..

இரா.விஜயகௌரி

நினைப்பதற்கும நடப்பதற்கும்
இடையிலெழும் செயல்கள்-அவை
நினைவதனில் சிறப்பாகும்
செயலாயின் மகிழ்வாமோ…

வாழ்க்கையொரு. சூதாட்டம்
வெல்பவர்க்கும் தோற்பவர்க்கும்
இடையெழுதும் போராட்டம்
அதற்குள்ளே பல சூட்சுமங்கள்

எட்டாக்கனி இனித்தெழுதும் அது
கைக்கிடைப்பின் அருமை கெடும்
கற்பனைக்கும் வாழ்வமைக்கும்
பொழுதினுக்கும் இடையிலெழும்
கணங்களெல்லாம். அதிரடிகள்

கானல்நீர் கனவில் வரும்
பெருஞ்செழிப்பை. வரவில் இடும்
முயற்சியொடு முனைப்பெழுதும் பெருவாழ்வு
நடைமுறையாய் பெருவிதியாய்
அழகாகும்அது அருமைபட வாழ்வாகும்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading