நிறம் மாறும் மனிதர்

வியாழன் கவிதை நேரத்துக்காக..
சிவதர்சனி இராகவன்
கவி இலக்கம் 1964…!

நிறம் மாறும் மனிதர்கள்..

அப்பப்போ மனிதரின் குணம்
மாறிக்கொண்டு தான் போக
இப்போதெல்லாம் இழந்து
வாடுகிறது நம்பிக்கை
துரோகங்கள் மலிந்து மெல்ல
துர்குணமே ஓங்குகிறதே..

பாசம் என்பதும் வேசம் எனப்
பக்குவமாய் உரைக்கும்
நேசம் போலி வேடமிட்டு
நெஞ்சை உறுத்தும் தாளமிட்டு
இதுவோ நாகரிக யுகமாம்
அறிந்தே புண்ணாகும் மனது..

இறைவன் படைப்பில் மிக
உயரிய சிறப்பு மனிதம்
நிறை மனத்துடன் வாழ
நித்தம் பண்பினைத் திருத்து
மாற்றம் விஞ்ஞானத்தின் ஊற்று
மனித நிற மாற்றம் அரிய
பண்பாட்டின் பிறழ்வு நிலையோ..
சிவதர்சனி இராகவன்
18/4/2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading