நிழலாடும் நினைவுகள்

நேவிஸ் பிலிப் கவி இல(401) 27/02/25

சின்னஞ் சிறுவயதினிலே
சித்திரமாய் என் நினைவில்
நித்தமும் நிழலாடும்
எனதூரில் என் வாழ்வு

அதிகாலை எழுகை
ஆலய தொழுகை
வாடிக்கைத் தொடராய்
நாளாந்த வாழ்க்கை

இன்பமாய் கழிந்த
இளமை வாழ்வில்
கவலைஎன்று ஏதுமில்லை
சுதந்திரமாய் சுற்றித் திரிந்தோம்

கிராமத்து வனப்பினிலே
ஓடியாடி விளையாடி
கடல் மண்ணில் கால் நனைத்து
களிப்போடு வாழ்ந்திருந்தோம்

கண்டிப்பு கரிசனையாய்
கண்மணி போல் காத்த முன்னோர்
நல்லறிவு புகட்டி எம்மை
நல்வழியில் நடத்தினரே

கண்ணி அன்று மடியில் இல்லை
அலைபேசி கையில் இல்லை
தொலைக்காட்சி பெட்டி இல்லை
விளையாட்டில் வலிமை பெற்றோம்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading