நிழல் தேடும் வேளை 92

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-07-2026

சுட்டெரிக்கும் சூரிய ஒளியில்
சுருங்கிப் போனது பூமியும கூட
தஞ்சம் புகவோ இடமுமில்லை
தகரக் காற்று வீசுது நகரத்திலே

வெட்டிச் சாய்த்த மரங்களின் சாபமோ?
வெப்பக் காற்றாய் வீசுது இங்கே
விண்வெளி வரை ஆராய்ச்சி கண்டீர்
வீட்டிற்கொரு மரம் வளர்த்தீரா?

காசைத் தேடி ஓடிய நீயும்
காற்றைத் தேடிக் கண்டு பிடி
மரத்தின் நிழல் தேடும் வேளை
மனதின் நிழலையும் தேடிக்கொள்!

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading