அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

நேரமாற்றம் வந்ததாலே 02.04.2026

செல்வி நித்தியானந்தன்
நேரமாற்றம் வந்ததாலே

குளிர்காலம் சென்றே
கோடையும் வந்திடும்
நேரமும் மாறியே
தூக்கத்தை கலைத்திடும்

அதிகாலை என்றாலே
ஆழ்ந்த உறக்கமும்
அதனையும் மறந்தும்
அலாமும் ஒலிக்கும்

ஐரோப்பா பரவலாய்
ஐக்கியமாய் மாற்றமும்
மின்சார சேமிப்பும்
அதன் பயனாகும்

இயற்கை வெளிச்சம்
இதமாய் கிடைக்கும்
இதனுடன் சேர்ந்து
இரசித்து வாழனும்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading