பட்டமரம்..

வசந்தா ஜெகதீசன்

பட்டமரம்…
சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு
இருப்பிடத்தில் இன்று
இயங்காது உறங்கும்
முதியோர் காப்பகத்தில்
முடங்கியே கிடக்கும்
ஆற்றலின் விருட்சமாய்
அனுபவத்தின் தேட்டமாய்
சுறுசுறுப்பின் மகுடமாய்
சுழன்று வந்த மனிதமே
இல்லறத்தின் இலக்கிலே
ஈகையாய் ஈர்ந்திட்ட
வள்ளல்கள் பலரின்று
பசுமை குன்றிட
பருவங்கள் தளர்ந்திட
பட்டமரமாகி
பாடுகள் பலவாகும்
பரிதாப நிலையிலே
பட்டறிவின் தருக்களே
பட்டமரப் பயன்களே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading