இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பாலா தேவகஜன்

தோன்றி மறைகின்ற
நீர் குமிழியாய்
தொலைகிறதே எம் வாழ்வு!
ஊன்றிய இடத்தில்
சுதந்திரம் இல்லையென
ஊரூராய் அலைந்தோம்
வேண்டிய கடவுளரும்
விடைதரவில்லை
தாண்டியவை எதிலும்
பிடிப்புக்களும் இல்லை.

அடக்கு முறைகளுக்கும்
அதிகாரத்துக்குள்ளும்
அவதிப்பட்டு அவதிப்பட்டு
காற்றின் விசையில்
அலையும் நீர்க்குமிழியாய்
நாம் காலத்தின் விசையில்
ஊரிழந்து உறவிழந்து
அகதியானோம்.

எங்கள் நிஜத்தினை இழந்து
அன்னிய தேசங்களில்
தொடுவானம் போல
நிறைவின்றி நிலையானோம்.
நீர்குமிழி வாழ்க்கை
நிறையவே ஆசை
உறவென்ற ஒன்றுக்காய்
எமக்கான உணர்வுகளை
இழப்போம்.

கன கனவுகளை நிறைக்கும்
கடினமான வாழ்க்கையிது
கனவுக்குள் வாழ்ந்து
கனவுக்குள் செத்து
நாமக்காக நாம்
வாழத்தொடங்கும் முன்பே
நீர் குமிழியாய் உடைவோம்.

எதிலுமில்லை பிடிப்பு
ஏன்? இந்த வாழ்க்கை
என்ற எண்ணம்
எங்கள் திண்ணங்களை
உடைக்கும்.
வாழ்வின் வண்ணங்களை
கலைக்கும்.
புரியாத வாழ்வுக்குள்
புகுந்து விட்டோம்
பொறுமையோடு கொஞ்சம்
கடந்திடுவோம்
நாம் வாழாவிட்டாலும்
நம் தாய்மண் வளமாகட்டும்.
நன்றி
பால தேவா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading