பிரபஞ்சம் என்னும் பெண்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 233
அமைதியான முழுமதியாய்
இருளை ஒழித்து இல்லத்தில்
ஒளி சேர்க்கும் பேரழகு பெட்டகமே
அன்புகொண்டு அணைப்பாள் குடும்பத்தையே

அறிவு ஆற்றல் கொண்டவள்
தேவதை என்பார் பெற்றவர்
உனக்கு எதுவும் தெரியாது
உன்னால் முடியாது என்பார் துணைவர்

இடி மின்னல் மழை காற்று
எதையும் தாங்கும் தரணி போல
வறுமையான வாழ்விலும் மகிழ்வுடன்
இல்லறம் நடத்தும் சக்தியே

வனவிலங்கின் அரசன் மேல்
அமர்ந்திருந்து அடக்கியாளும் அரசியே
உன் திறமையை வளர்த்து
சமுதாயத்தை சிறப்பாக நடத்து புலம்பாமல்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading