08
Jan
குறைகளைக் குறைத்திட உயர்வு
சோம்பலை நீக்கிடு சுதந்திரம் பெற்றிடு
கூம்பிய பாதையில் கூடியும் நில்லாது...
08
Jan
” பூத்துவிட்டாள் காலமகள் “
ரஜனி அன்ரன் (B.A) " பூத்துவிட்டாள் காலமகள்" 08.01.2026
காலத்தின் சுழற்சிமாற்றம் காலமகளின்...
08
Jan
அவர் அருளின் கையொப்பமாய் வாழ்க்கை
-
By
- 0 comments
சிறு அணுக்கொண்டு ஆகாயம்வரை அவர் ஆட்சி
ஆரம்பமும் முடிவுமில்லா மஹா சக்தியாக அவர்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 238
17/10/2023 செவ்வாய்
“மீண்டும் எழு!”
——————
மெய் தொட்டால் சுருங்குமிலை,
மீண்டும் விரிய மறப்பதில்லை!
கை பட்டால் சுருளும் அட்டை,
கலங்கி உயிர் மாய்ப்பதில்லை!
கல்லடி விழுமே என்றஞ்சி,
காய்க்காது மரம் விட்டதில்லை!
வில்லடி படுமே என்றஞ்சி,
விஜயன் வில்லை விட்டதில்லை!
எட்டாது கொப்பெனச் சிலந்தி,
எடுத்த காரியம் நிறுத்தவில்லை!
எட்டு(ம்) வரை மீண்டெழுந்து,
எட்டியதை, பார் மறக்கவில்லை!
நெப் போலியன் பொனபாற்றும்,
நினைத்த வுடனே வெல்லவில்லை!
தப்போ தவறோ ஏதுமின்றி,
தரணியில் யாரும் நிலைத்ததில்லை!
வெற்றி தோல்வி வாழ்க்கையதன்,
வியத்தகு படிகள் என்றெண்ணி,
வீழ்ந்தால், மறுபடி மீண்டெழுந்து,
வாழ்வோம் தரணியில் என்றென்றும்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...