துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர் குளிரும் கூதலும் குறைந்திடவே பளீரென மனமது நிறைந்திடுதே ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே துள்ளிக் குதிக்குது சந்தோஷம் மெல்லத்...

Continue reading

மனமா அறிவா அறிவாய் மனமே?!!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2129

மனமா அறிவா?
அறிவாய் மனமே!!

அதிகமாய்க் காயம் பட்டும்
அதற்கே புரிவதில்லை
இதுதான் விதியோ என்றால்
இதற்கு விளக்கம் இல்லை
இறப்பு மலிந்த மண்ணில்
இதயத்திக்கு மதிப்பு இல்லை
மனமோ அறிவோ என்றால்
மயக்கம் அதிலும் உண்டாம்..

எத்தனை விளக்கம் இங்கே
விளக்கியும் பயனோ இல்லை
மனதுக்கு புரிந்த போதும்
அறிவோ ஏற்பதும் இல்லை
அறிவால் அறிந்த போதும்
மனது சமாதானம் ஆவது இல்லை..

அறிவால் செயல் ஆற்றின்
மயக்கம் இங்கே இல்லை
அகத்தால் பார்க்கும் போது
அறிவுக்கோ வேலை இல்லை
எத்தனை சொல்லியும் கேளா
மனதினுக்கு துயரே மிச்சம்
இதுவும் கடந்தே போகும்
இனி அதுவே மருந்தும் ஆகும்..
சிவதர்சனி இராகவன்
27/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பட்டமரம்... சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு இருப்பிடத்தில் இன்று இயங்காது உறங்கும் முதியோர் காப்பகத்தில் முடங்கியே ...

Continue reading