மனோகரி ஜெகதீஸ்வரன்

தலையீடு

தமைநிறுத்தவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தடம்மாற்றவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தலைமையும் செய்யும் குறுக்கீடு தலையிட்டு
மத, இன, மொழி வெறியரும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தனதன்பினாலும் தாமறியாதே செய்வர் குறுக்கீடு தலையிட்டு

எவ்வகையில் வந்தாலும் நிகழும் குறுக்கீடு
எழுதியே செல்லும் வேதனை வரைகோடு

அகப்படுவோர் உணர்வைக்
அத்துமீறிக் கிழிக்கும்
அகச்சிதைவு கொடுத்து
ஆளுமை கெடுக்கும்

சினத்தை கக்கியே
சீறுவர் அகப்பட்டோர்
மனத்தை இறுக்கியே
மாற்றுவர் குணத்தை
கனவையும் மறந்து
காலத்தையும் வெறுப்பர்

கதவையும் பூட்டுவர்
கனத்தை விரட்ட
இதத்தையும் தொலைப்பர்
இன்னல் கூட
மதங்கொண்ட மனத்தினர் தலையீடு பதமோ சொல்லு

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading