தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

அலை ஓசை

சந்தம் சிந்தும் அலையோசை
சட்டென மாறும் அதனோசை
சிந்தும் அதுவும் பாவோசை
சீறியெழும் கவிபுனை யாசை
சொந்தம் கடலுக்கு அதனோசை
செய்திகள் பலதரும் அலையோசை

நித்தம் கேட்கும் அலையோசை
நிகழ்த்தும் அதுவும் பலவோசை
எத்தும் அலையால் வருமோசை
ஏந்தக் காதும்கொள்ளும் பேராசை

சீறிச் சினப்பின் கடலன்னை
சீறியலையும் கக்கும் பேரோசை
கீறிக் கிழிக்குமது காதை
கிட்ட இருப்பின் எட்டிமோதி
ஆறி யடங்கின் கடலன்னை
அலையும் துப்பும் அமைதியோசை
கூறிடும் செய்தி காவுமோசை
மீனவருக்கான அரணோசை அருளோசை

(கடலின் பாஷையே அலையோசை )

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading