” பூத்துவிட்டாள் காலமகள் “
அவர் அருளின் கையொப்பமாய் வாழ்க்கை
-
By
- 0 comments
மனோகரி ஜெகதீஸ்வரன்
மீண்டெழு
ஏற்றம் இறக்கம் இரண்டும்
ஏறிக் குந்தும் திரண்டு
ஏற்றம் சிந்தும் இன்பம்
இறக்கம் கொடுக்கும் துன்பம்
இறக்கம் கண்டு சுருங்கின்
பிறப்பை மனதும் வெறுக்கும்
அறத்தை அளந்தும் வெதும்பும்
சிரத்தை கெட்டுச்
சீலமும் சிதறும்
மரத்தைப் போன்றே
மனமும் மாறும்
சிரமும் தாளும்
சிதைவே சூழும்
நிதர்சனம் இதுவே
நிம்மதிக்கும் பழுவே
நீடித்தால் நிலைக்கும் வழுவே
நடுங்கி வீழின்
ஒடுங்குமே நன்மை
விடுபடாது சுழலுமே தீமை
விடுப்பேடாது நிற்குமே வறுமை
எடுபடாது போகுமே நீதி
வடுப்படுமே உந்தன் சந்ததி
மிதிபடுமே உந்தன் சங்கதி
வாட்டும் பிறரின் வக்கரிப்பு
வந்து தாக்கும் நிராகரிப்பு
அதனை நீக்கத்தேவை
யுந்தனுக்கு சுதாகரிப்பு
நீமீண்டெழுந்தாலே அடங்கும் வீனரின் கொக்கரிப்பு
முயல்வைக் கொழுவி
இயலாமையக் கழுவி
மிடுக்கைத் தழுவி
மீண்டெழு
திறனடைக்கும் கலாச்சாரக் கட்டுடையும்
கறைகக்கும்
தீதுடையும் வாதுடையும்
முறையாய் எதுவும் நடக்கும்
தடையும் படுக்கும் தலையும் நிமிரும்
விடையாய் வெற்றியே பிறக்கும்
நடையிலும் நளினம் சிறக்கும்
மனோகரி ஜெகதீஸ்வரன்.
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments