சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மாற்றம்

மாறுபடும் நிலையே மாற்றம்
ஊறுதரும் சிலமாற்றம்
உய்வுதரும் பலமாற்றம்

சாதக மாற்றம் தரும் ஏற்றம்
பாதக மாற்றம் தரும்
ஏமாற்றம்

முன்னைய மாற்றத்தாலே
அதுதந்த ஏமாற்றத்தாலே
இன்னமும்
நடக்கின்றோம்
உபத்திரவச் சாலையில்
ஊனவுணர்வுகளோடு
உடற்கூடு காவி

எச்சங்களைப் பேணும்
எங்களது ஆசை
உச்சத்தில் இருப்பதாலேயே
ஊமைகளாய் கடக்கின்றோம்
அச்சத்தை மறைக்கவே
ஒப்புக்காய் சிரிக்கின்றோம்
கொச்சைப் பேச்சுக்களைக்
கொசுவத்தில் கொழுவாது
இச்சை யடக்கி
இதயத்தை இறுக்கின்றோம்
பிச்சைகளை ஏற்றும்
பிஞ்சுகளைக் காக்கின்றோம்

கூச்சலிட்டு என்ன பயன்?
கும்மிருட்டு அகலவா போகிறது
ஆச்சரியம் நிகழின்
அனைத்தும் மாறும்
பாதகம் கழுவேறும்
சாதகம் அரங்கேறும்

முப்பொழுதும் வேண்டித் துதிக்கின்றேன்
எப்போது வருமது சொல்லுங்கள்
அப்போதே பூச்சொரியும் என்பாக்கள்
தப்பேதும் சொல்லாதீர்கள்
அதுவரை மௌனமே எனதுமொழி

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan