மரணித்தவனே மறுபடி வந்தால்..

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025

மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி முளைத்ததைக் கண்டாயா?

மரணித்தவனே அண்ணா..
மறுபடியும் வருவாயானால்
மனதில் கிடப்பவையை
மணிக்கணக்காய் பேசலாம்

நினைவுகளின் சுமை இறக்கி
நிகழ்காலக் கதை பேசி
விழிகளில் தேங்கிய நீரையும்
வீணான காலத்தையும் மறந்து

மாமன் சாயலென ஊரார் சொல்ல
மகனின் முகம் பார்க்க
மறுபடியும் பிறப்பெடுப்பாய்
மலைத்துத் தான் நீயும் நிற்பாய்!

மரணித்தவனே மறுபடியும் வந்தால்
மௌனத்தில் நிலைப்பனோ
மழையாய்க் கண்ணீர் கொட்டிடுமோ
மண்டியிட்டுக் கிடப்பனோ?…

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading