அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

ராணி சம்பந்தர்

தேசம் முழுதும் பழுதாக
வேஷம் காட்டி முழுதாகக்
கோஷம் போடும் நாசதாரி

வல்லரசு எனும் பெயரிலே
கொல்லரசாய் பொல்லாத
வான் தாக்கில் அரக்கதாரி

நாளும் பொழுதும் நில்லாது
தொடரும் விமானக் குண்டில்
படரும் நச்சு வாயு சிதறல்கள்

அணுகுண்டுத் தயாரிப்பு எனக்
குட்டிக் குட்டித் தலையை உருட்டி
கண்ட கண்ட கண்ட இடங்களில்
வெடிக்கும் குண்டு வீச்சுகளில்

பிறக்கும் அங்கவீனக் குழந்தைகள்
மரண ஓலங்களும் சாட்சியாகிடவே
நோயற்ற வாழ்வே குறைவற்ற –
செல்வம், மாசற்ற உலகே நோயற்ற
வாழ்வு ஆகிடத் தொழுதிடுவோமே .

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading