அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

கவிதை 795
மாசற்ற மண்ணாக பூமி மாறிடுமா
சுகமான வாழ்வு நிலத்தில் நிலைத்திடுமா
தூசற்ற காற்று இத்தரையில் வீசிடுமா
நோயில்லா கிரகமாக பூமி சுழன்றிடுமா

தூய நீர் அகிலத்தினை நிறைக்கவேண்டும்
விஷமில்லா உணவுண்டு வாழ்க்கை நகரவேண்டும்
மரங்களின் நிழலில் மனிதம் வளரவேண்டும்
பறவைகள் பாடும் நன்றியொலி கேட்கவேண்டும்

உலகம் காப்போம் நாம் ஒன்றுபட்டு
இன்றே தொடங்குவோம் இம்மாற்ற பாதையிட்டு
மனிதர்க்கு சொர்க்கம் மாசற்ற நிலமே
அவர்களின் செல்வம் நோயற்ற வாழ்வே.

ஜெயம்
08-04-2026

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading