மாற்றம் ஒன்றே..

கெங்கா ஸ்டான்லி
மாற்றம் ஒன்றே
—————-
மாறும் உலகில் மாறும் மனிதர்கள்
தேறும் நாளும் தெளிந்த சிந்தையில்
கூறும் போதும் குறையாக விளங்கும்
ஆறுபோல அலைகள் அடிக்கையிலே
ஊடக மாற்றம் ஒலியில் ஏற்றம்
பாடமாக்க் கற்க பலதும் சாற்றும்
ஏடாகூடமாக எழுதும்போது எழுத்துகள் மாறாது
மாடாய் உழைக்கும் தமிழன் வாழ்வில்
பெண்கள் வழியில் பெரிய மாற்றம்
கண்கள் என்று கருதும் போதும்
விண்மீன் போல உயர்ந்து நின்று
விடிவெள்ளி காணும் வியக்கும் வண்ணம்
பெண்களின் சாதனை பெருகும் பொழுது
பெண்ணடிமையும் உறைந்து கிடக்கும்
புதுமைப் பெண்ணாய் மாற்றம் காண
புதியவை நாளும் செய்திடு பெண்ணே!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading