மாற்றம்

சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184

“மாற்றம்”
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!

நம்மை நாமே சரி
செய்து கொள்வது
அதைவிட சிறந்த மாற்றம்
எதுவும் இல்லை!

சில புறக்கணிப்புக்களால்
சில நேரங்களில்
பலர் மாற்றம்
அடைகின்றார்கள் பலமானவர்களாக!

கால மாற்றம்
நேர மாற்றம்
இணைய வலையமைப்பு தேடலின்
தோற்றம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
22.03.24

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading