முயற்சியே பலம் …முனைப்பே திடம் ….பே

சர்வேஸ்வரி.க

முயற்சியே பலம்…முனைப்பே திடம்… ….
மூலதனமாக்கிட
மூலம் ஒன்றே அவசியம்…
மூலம் மூலமே நாளைய மாற்றம்….
நடக்கவும் கடக்கவும் முயற்சியே பலம்…. ஏந்தும் எண்ணமே
முனைப்பின் திடம்….

இயக்கத்தின்
உணர்வே வாழ்வியலின்
பயன்….
கருத்துக் களம் காலத்தின் கோலம் …. …
நாட்டலும் களைதலும் நடுநிலைமையின் பெறுபேறு….
கூட்டலும் கழித்தலும் ஒன்றிணைந்த
பெறுபேறாகும்…

புரட்சியின் திரட்சி புவியின்
முனைப்பு…
எழுச்சிமிக்க முனைப்பே ஆனிபத்தின்
சரிதம்…
அகில விழிகளை
அகலவிரிந்திட
வைத்துள்ள அற்புதமான பாமுகத்தின்
சரிதம்… …

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading