முயற்சியே பலம் முனைப்பே திடம்

ராணி சம்பந்தர்

புது வாழ்வை நோக்கிப்
புறப்படும் புயல்களிலே
திட தன்னம்பிக்கையே
தடமான தும்பிக்கைப்
பயிற்சியதுவே முயற்சி

மனிதனை ஆக்கியது
சிறக்க அடம் பிடியாது
வேடம் காட்டாமலும்
வெந்து போனதும்
நொந்து ஆனதுமே
மறந்து அயரா உழைப்பு

இது தான் வேண்டும்
அதுதான் அதுதான்
என்றிலாது கிடைப்பது
அணைத்து முன்னேற
பிழைப்பின் உயர்ச்சி

இலட்சிய முனைப்பாடிட
அலட்சிய முறைப்பாடு
அணைந்து வல்லமை
பிணைத்து நாளும்
பொழுதும் விடாத
முயற்சியே பலம்
முனைப்பே திடம் .

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading