20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

மொழியும் கவியும்

ரஜனி அன்ரன்

“ மொழியும் கவியும் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 23.01.2024

மொழியும் கவியும் துருவங்கள்
மனதை மகிழ்வாக்கும் சிகரங்கள்
மொழியின்றிக் கவியில்லை
கவியின்றி மொழியில்லை
மொழியிலே நீந்துவது கவி
மொழியின் சாவியே கவி
மொழிக்குள் உவகையும் உணர்வும் சேர
உருவாகுமே உன்னத கவி !

மொழி பேசுது கவி பாடுது
விழி தேடுது ஒளி சேருது
மொழியும் கவியும் இணைந்தால் உலகம்
மொழியென்பது உயிரின் மூச்சு
மொழியென்பது உறவின் பாலம்
உள்ளத்தின் தீண்டல் மொழி
உலகை மாற்றும் உந்துசக்தி மொழி
இதயத்தை இணைப்பது கவி
உதயத்தின் அழகியல் கவி !

மெளனத்தின் மர்மத்தில் பிறந்தது மொழி
மனிதனின் உள்ளத்தில் முடி சூடியது கவி
சொற்களின் அடுக்கில் உருவானது கவி
கவியின் அழகால் உயிர்ப்பானது மொழி
கலையின் உச்சமே கவி
மொழியால் மொழிந்தால் வருவது கவி
பேசும் பாசையாம் மொழி
எழுதும் ஓசையாம் கவி
மொழியில் மூழ்கி கவிகள் புனைந்து
விழிகளால் உலகை ரசித்தேன் நானும்
மொழியும் கவியும் என்னிரு விழிகள் !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading