19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
12.10.23
கவி இலக்கம்-286
ஆசிரியம் போற்றுவோம்
ஆரம்ப பள்ளி முதல்
இறுதிப் பட்டப்படிப்பு
வரை படி ஏற்றியவர்
அடைக்கலம் தந்து
பாதுகாப்புக் கொடுத்து
அறிவொளி ஊட்டியவர்
வினாவுக்கு வினா தொடுத்து
எம்மிலே விடை எடுத்து
வீரியம் தந்த வித்தகர்
கலை,விளையாட்டுத்துறை,
நன்னடத்தை எதிலும் வழி
நடத்திய போற்றத்தக்க
பெரியோர்
எவ்வளவு அக்கறை எம்மில்
எக் கறையும் பிடிக்க விடாது
அக்கறையாய்ப் படிப்பில் கவனம்
எடுத்துக் கரை சேர்த்த
அற்புதக் கொடையாளிகள்
என்றும் வழிகாட்டியவர்
இன்றும் விழியில்
முட்டி முட்டி நிற்பவர்
என்றென்றும் அன்பு
கலந்த நன்றி மறவாது
ஆசிரியம் போற்றுவோம்
போற்றுவோம் .
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...