இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ராணி சம்பந்தர்

25.02.25
ஆக்கம் 178
நம்பிக்கை

அன்று நம்பிக்கையே
தும்பிக்கை போலானது
இன்று அவநம்பிக்கை
அணைக்கின்ற கடுஞ் சூழலானது

நாகரீக உலகில் பயங்கரம் பயணிக்க
நடந்தவை நடப்பவை
நினைத்திடவே நீந்தி
வர முடியாதென மனம்
தழும்புகிறது

நாட்டு நடப்பெல்லாம்
நீதியின்றிய அநீதியே
நடுவர் முன்னே நரபலி

கண் கட்டிய நீதி தேவதை வெந்து போய்
நம்பிக்கையை நொந்து
திட்டித் திட்டிக் கதறி
அழுதது

அநாகரீக வழியில் களம் சேர்க்க மெல்லக்
காய் நகர்த்தும் ஆழமான கழுகுகள்

அடாவடித்தனம் மீண்டும் தலைதூக்கி
போராடும் இரத்த
வெறியில் இரக்கம்
அற்ற நம்பிக்கை
வேண்டுமென மானிடரில் நினைந்திடுமா ?

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading