17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
வசந்தா ஜெகதீசன்
பாத்திரங்கள்...
அனுதின வாழ்வின் அத்தியாயம்
அகிலத் தேரின் அணிகலனே
மனித வாழ்வை உராய்ந்தெழுதும்
மாற்று முகங்கள் பலநூறு
செதுக்கும் வாழ்வின் உளியாகி
சீர்பட்ட சிலையை வெளியாக்கும்
சிற்சில தருணத்தின் முகமூடி
சிந்திக்க மறுக்கும் நியாயவாதி
நட்பின் எத்தனம் பலதிசையில்
நலிந்தே குன்றும் தேய்பிறையாய்
வாழ்வில் உருளும் நிலை மேன்மை
வற்றாச் சுரங்க வளம் புதுமை
போடும் வேஷம் அவரவர்க்கு
புவியில் வாழும் தலைமுறைக்கு
பாடம் கூறும் படிப்பினைகள்
பட்டறிவும் ஞாலப் போதனைகள்
சுழலும் அவனி வரலாற்றில்
சுமப்போம் பற்பல பாத்திரங்கள்
காலம் தந்த போர்வைக்குள்
வேடம் தாங்கிய பறவைகள் நாம்
ஈழவேரின் அடித்தளத்தில்
இடம்பெயர்ந்த வாழ்வும் பாத்திரமே
அகதியென்னும் அட்சயமாய் அகில பரிதி உறைவிடமாய்
அணிந்தே தரித்திடும் மானிடர் நாம்.
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...