வசந்தா ஜெகதீசன்

பசுமை…
பசுமைக் கோலம் பரந்த உலகில்
பயிரின வானம் படரும் எழில்
வாழ்வியல் வரத்தின் கொடையே
வறுமை துரத்தும் உலகே
மழைத்துளி தூறலின் மதிப்பாய்
மண்ணிலம் பூக்கும் உழைப்பாய்
மானிடம் வாழும் உயிர்ப்பாய்
மகிழ்வின் தரிப்பிடம் பசுமை
ஆளுமே உலகினை போர்த்தி
அவரவர் வாழ்வினை உயர்த்தி
பாரே உனக்குள் அடைக்கலம்
உருளும் உலகின் தரிப்பிடம்
பசுமை குன்றின் உணவேது
பாரின் செழிப்பிற்கு வழியேது
உலகைக் காக்கும் எஜமான்.நீ
உம்மைக் காப்பது எம் கடனே
தருவை நாட்டி தரணிக் காத்து
பசுமை உலகில் பயணிப்போம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading