வாழ்வின் தேற்றம்

ஜெயம் தங்கராஜா

இன்பம் துன்பம் இரண்டினதும் கலப்பு
புன்னகையும் அழுகையும் சேர்ந்ததொரு அமைப்பு
தினமும் அனுபவங்களை சேர்த்துக்கொள்ளும் தன்மை
மனதின் வடிவமே வாழ்வாகிடும் உண்மை

வண்டாகப் பறந்து மலருக்குமலர் தாவியும்
பண்பாடி பறந்து குயிலென கூவியும்
உண்டு உடுத்தி உறங்கும் சீவியம்
உண்மையிலே இந்த வாழ்வொரு காவியம்

பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவிலான ஆட்டம்
திறந்தவெளி திடலிலே சுதந்திரமாய் ஓட்டம்
பறந்துமே இரவுபகல் இரைதேடும் கூட்டம்
சிறப்பாக வாழ்ந்திட பெருங்கொள்ளை நாட்டம்

எதற்காக பூவுலக வருகையும் இங்கே
அதற்குப் பின்னாலே செல்லுவதும் எங்கே
பெறுதலும் மறைதலும் வாழ்வென்று ஆகிவிட்டது
இறப்பெனும் சாபத்தை யாரிங்கு இட்டது

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading