01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
வாழ்வில் கலை “யும் தொடரா நிலை ” யும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
06.02.25
ஆக்கம் 177
“வாழ்வில் கலை “யும்
தொடரா நிலை ” யும்
நிலை மாறும் உலகில்
நீண்ட வாழ்வில் -பல
பண்டைய கலைகளோ
நின்ற இடம் தெரியாது
தடம் புரண்டு மெல்ல மெல்லக் குறைந்து
கொண்டனவே
குதூகலம் தந்த நாட்டுக்
கூத்தும் துள்ளலுடன் வந்த வில்லுப்பாட்டும்
கொட்டகையில் அரங்கேறிக் கை
கொட்டி ஆரவாரித்த
நாடகமும் மருகி
நீண்ட பெருமூச்சுடன்
மாண்டனவே
கற்பனை மிதந்து உயிர்
கொடுத்த கலை வடிவம்
ஓவியமே வரையாது
போனதால் கண்ணீரில்
கரைந்து கவலையுடன்
காணாமல் போனதே
கல்லிலே சிலை வடித்த
சொல்லின் பெருமைத்
தமிழன் இசை மீட்டிய
கருவிகள் நரம்பு, தோல்,
துளை, தாளம் தன்
பயன்பாடு மறந்து
வாழ்வில் கலையும்
தொடரா நிலையும்
நினைந்து நினைந்து
ஒரு மூலையில் முடங்கித் தூங்கிக்
கொண்டதே.
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...