மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

விடுமுறை வந்தாலே 677

விடுமுறை வந்தாலே Selvi Nithianandan

விடுமுறை வந்தாலே
வீட்டிலே வீதியிலே
விந்தையாய் விருப்புடன்
விழாக்கோலம் காணும்

பெற்றோர் விடுப்பும்
பெரிதாய் சேர்ந்திட
சுற்றுலா ஒருபுறம்
சுவையூட்டம் பேணும்

கடற்கரை நாடியே
கடலலையாய் மக்களும்
கடின உழைப்பும்
கவலையே மறக்கும்

பலரக உணவும்
பகுதியாய் வரவும்
பசுமை நினைவும்
பாடமாய் இருக்குமே

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading