வேருக்கு உரமாகியவன்

ஜெயம்
விடியலை தந்து தன்னை சுருக்கிக்கொண்டது தீபம்
குடிகொண்ட தாகத்தினால் உயிரை கொடுத்து தியாகம்
இனத்தின் வாழ்வு செழிக்க
தன்னை அழித்த தன்மை
குணத்தால் அவனே தங்கம்
மண்ணின் மைந்தனென்பதே உண்மை
தன் சுகங்களையும் இன்னுயிரையும் தியாகம் செய்வதென்பது
மண்மைந்தனால் மட்டுமே கொடுக்கக்கூடிய அன்பது
இலட்சியங்களை அடைவதற்கு தனையிழக்கும் தன்மை அளப்பரி யது
மலரவேண்டியே தேசத்திற்காக தன்னையே அர்ப்பணிப்பது வரலாற்றுக்குரியது
தாயகத்திருக்காக வேண்டிய ஒரு சுயலமற்ற நேசத்தின் வெளிப்பாடு
தாயாய் சேயாய் பழகியதால் அவர்காக்க மூச்சையும் விட்டதந்த கூடு

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading