சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
********இலக்கு*********
“”””””””'””””””””””
உள்ளத்தின் துடிப்பு , உணர்வலையின் கொதிப்பு.
ஊக்கத்தின் உயிர்ப்பு , உதிரத்தில் கலந்தோர் விறு விறுப்பு.

சுடுக்குப் போட்டுச், செயல் ஆற்றும், குறிவைக்கும்
இலக்கு .
சூரணம் போல், நாசுள் ஏறும் விறுக்கென்ற மிடுக்கு.

கோபம் மிகுதியால் , கொதித்தெழுந்து , குறி வைக்கும் , இலக்கு.
பாசத்தின் பிணைப்பதனால் , பெருமை சேர்ப்பதுவும் ஒரு உருத்து.
இலக்கு……. இலக்கு

அங்கமெல்லாம் நொந்த தாய்க்குத், தங்கம் பூட்டி மகிழவே ஒரு துடிப்பு.
அடுப்பெரிய உழைத்தவரோ, சபையினிலே , மார் தட்டவேண்டி, ஆக்குரோச வெடிப்பு.

தாய்மொழி க்குத் தரணியிலே பெருமை சேர்க்கவே , அயராத, ஓயாத உண்மை உழைப்பு .
தெவிட்டாத தேன்மொழியைத் , தேசமெல்லாம் தொனிக்க வைக்கும் அண்ணலுக்கு ஒரு முடி சூட்டு .
இலக்கு…….. இலக்கு
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading