அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 63

தலைப்பு — இனிய பறவைகள்

கதிரவன் வரவில் கானப் பறவை
விடியலை வரவேற்க பூபாளம் இசைக்க
க கா,கிகீ,குகூ கொக்கொக்
மானிடம் மெய் மறக்க துயிழெழுப்பி

கூட்டிலும் காட்டிலும் வாழும் பறவை
காலநிலை மாற்றத்தை மனிதர்க்கு தெரிவிக்கும்
விவசாயின் நிலைமையை உணர்ந்த நண்பன்
புழுக்களை உண்ணும் இனிய பறவை.

தோகையை விரித்தால் மழையென நடனம்
தூதுவனாய் பறந்தான் அண்டை மன்னனிடம்
நடுவானத்தில் வட்டமாய் நோட்டமிடும் பெரியவன்
காதல் பட்சியாய் அழகான ஜோடிகள்

என்மன வானில் சிறகடிக்குது
இனிய பறவைகள்
இதயத்தை வருடுது பறவைகளின் கானங்கள்
நீங்களும் பேசுங்கள் தானியங்கள் போடுங்கள்
தண்ணீர் கொடுங்கள் நன்றிகளோடு இனியபறவைகள்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
10/01/2021

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading