Jeya Nadesan

கவிதை நேரம்-14.04.2022
கவி இலக்கம்-1493
அழகிய மலர்களின் வனப்பினிலே
——————————————–
இறைவன் படைப்பில் அழகிய மலர்கள்
அன்னையர்கள் உதிரத்தின் பிறப்புக்கள்
உலகிற்கு ஒளிர் மயமான குழந்தைகள்
பாமுகத்தில் பல வர்ண உதயங்கள்
பெற்றோர்கள் பெற்றிட்ட சுமைகள்
கற்றிட்ட கல்வி உயர்வில் திறமைகள்
பெற்றிட்ட சந்தோச அழகிய முகங்கள்
வளர்ந்திட்ட பிள்ளைகள் ஆளுமைகள்
நாளுக்கு நாள் முன்னேற்ற பாதை சிறப்புகள்
சிந்தனை ஞாபக வளர்ச்சி பெருமைகள்
பாடல்,இசைக்கருவி,பயணங்கள்,சந்திப்புகள்
பாடல்கள்,பாடுவதின் சொற் கோர்வைகள்
அமைதியாக பாடி குதூகலிக்கும் சந்தோசங்கள்
கல கலப்பு சிரிப்பில் மகிழும் தருணங்கள்
நாமும் பெற்றோர்,உறவுகள் உட்பட மகிழ்வோமே

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading