04
Sep
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய்...
04
Sep
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே........ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும்...
04
Sep
நன்றியாய் என்றுமே!
நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!
பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு...
கமலா ஜெயபாலன்
தண்ணீர்க் குடத்தழகி
——————————-
தண்ணீர்க் குடத்தழகி
தாமரைப்பூ முகத்தழகி
மண்ணின் மணத்தழகி
மயக்கிடும் கண்ணழகி/
கொடியிடை அசைந்தாட
கொலுசு குதித்தாட
வடிவான வஞ்சியவள்
வாறாளே வாஞ்சையுடன்/
தண்ணீர் சரிந்தொழுக
தாவணியும் நனைந்தூற
கண்மை கரைந்தோட
காரிகையே பேரழகே/
சிலைபோல உன்னழகு
சீண்டுதடி என்மனதை
கலையாத உன்னுருவம்
கண்ணிற்குள் நிற்குதடி/
வண்ணக் கிளியழகே
வசந்த மலரழகே
எண்ணங்கள் தோன்றுதடி
என்னவளே என்மனசில்/
நெற்றி வகிடெடுத்து
நீவித் தலைமுடித்து
பற்றுடன் பாரேன்டி
பாவிமகன் நனேன்டி/
பஞ்சுவிரல் கையழகி
பவள உதட்டழகி
மஞ்சள் நிறத்தழகி
மச்சானைப் பரேண்டி/
இஞ்சி இடுப்பழகி
இதமான கண்ணழகி
பஞ்சியும் பராமல்
பாய்ந்தோடி வாயேண்டி
கமலா ஜெயபாலன்

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...