மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலா சிவநாதன்

வண்ணக் கோடை…..

தெளிந்த வானத் திரையினிலே!
தெளிவாய் முகில்கள் கூட்டமங்கே!
அளிக்கும் வண்ணக் காட்சியிலே
அகமும் கண்டு மகிழ்ந்திடுமே!
துளிக்கும் மழையின் வீழ்ச்சியிலே
துாறல் கண்டு மெய்சிலிர்க்கும்
களிக்கும் மயில்கள் அழகினிலே!
காலம் மெல்லக் கதையெழுதும்

வண்ணக் கோடை வந்திடினும்
வாழ்வே மகிழ்வு கொண்டிடுமே!
எண்ணம் யாவும் மேன்மையிலே!
எழுவோம் புதிய துளிர்ப்பினிலே
கண்ணைப் பறிக்கும் வெய்யிலுமே
கதைகள் வரையும் பலநேரம்
மண்ணை நினைக்கும் காலமுமே!
மனதை வருடும் சிலநேரம்

கோடை கொழுத்தும் வெயிலிலே
கோவில் விழாக்கள் பரபரப்பு
ஆடை அணிகள் அலங்காரம்
அழகு வண்ணப் புடவைகளும்
தோடை அப்பிள் பழங்களும்
தோட்டம் நிறைய பயிர்களும்
சோ‌டை போகா வாழ்விங்கு
சொர்க்கம் காணும் சுகமுமிங்கு!

நகுலா சிவநாதன் 1687

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading