திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 200

தபைப்பு — வாழட்டும் பல்லாண்டு

ஆரவாரமின்றி ஏற்றமுடன் வாரங்கள் இருநூறு
பாரமின்றி சந்தமுடன் பலரையும் இணைத்து
வாரந்தோறும் சுவைக்க வைத்த சந்தம் சிந்தும் சந்திப்பு
வீரமுடன் மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள்!

காலத்தின் நிகழ்வை கோலத்தைக் காட்டி
நீளமாய் வாரவாரம் நற்கவிதைகள் வழங்கி
ஆழமாய் அறிவுரையை அறவுரையை வழங்குதற்கு
வாழட்டும் பல்லாண்டு வளமாகப் புவிதனிலே.

கவிதையின் சிறப்பை கவர்ச்சியைக் காட்டி
புவிதனில் பலரை கவிப்பரப்பில் புகுத்தி
உதவியாய் கவிவளர ஊக்கம் தருவதனால்
குவியட்டும் புகழ் குவலயத்தில் மேன்மேலும்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
15/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading