கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பக்குவம் தந்த ஆசான்

குன்றிலிருக்கும் குலதெய்வம் ஆசான்
என்றும் எமக்குமே ஏணியாய் – நின்றுமே
ஊக்கம் தருகின்ற உன்னத பண்பாளர்
நோக்கம் கருதாத நிறைவு

நிறைகுட மாகவே நேர்த்தியாய்க் கற்கக்
கறையில்லா( து) ஊட்டுகின்ற கல்வி- துறைசார்பாய்
ஏற்றம் வரவே எழுத்தறி வித்தகுரு
போற்றிட நாமும் பணிவு

பணிவுமே வாத்தியாரின் பக்குவம் தந்ததே
துணிவாய் மரபில் துலங்கி – மணிமணியாய்
சற்றும் தயங்காச் சரஸ்வதி தேவியும்
பற்றாய் பயிற்றினார் பார்த்து.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading