16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 205
03/01/2023 செவ்வாய்
“தை மகளே!”
———————
தைமகளே! தலை மகளே வருக!
தரணி போற்றிடும் தாயே வருக!
மையிட்ட கண் பெண்ணே வருக!
மங்களம் நிறைவாய் தந்திட வருக!
முப்பத் தொரு நாட்களுடன்,
முகூர்த்த நாளும் கொண்டவளே!
செப்பிய படியே மணவறையில்,
சேர்ந்து கொள்ள வைப்பளே!
புற்றை வெட்டி, மண் எடுத்து,
புதிய அடுப்பு தனைப் பிடித்து,
கற்ற அழகுக் கோல மிட்டு,
கதிரவன் தன்னை வரவேற்க!
நெல்லு மணியின் உமி நீக்கி,
நெய்யும் சேர்த்து பொங்க லிட,
வெல்லம், பாலும், முந்திரியும்,
வேண்டி விரும்பிச் சேர்ந்திடவே!
துன்பமும் துயரமும் கருகிடவே,
தூய்மை துளிர்த்துத் தழைத்திடவே,
வன்மமும் வஞ்சமும் ஒழிந்திடவே,
வஞ்சியே வருக! வளம் தரவே!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...