திருமதி. கலாதேவி பத்மநாதன்

21.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித் தலைப்பு !

“விடியல்”

விடியாத இரவுக்குள் வழிதேடும் குருடர்களாய் விடியலுக்காய் காத்திருந்து பூத்திருந்த விழிகளிரண்டு

ஒடிந்த சிறகுடனே ஓயாது ஓலமிடும்
ஒருபறவை இருதேசம் இறுதிக்காய் காத்திருக்கு

இடிகூட தாங்கிடலாம் இல்லை சொந்தநாடு இந்தசொல்லை மட்டும் தாங்க முடியலையே

மடிமீது தாங்கிய மண்வாசம் மாறவில்லை
படிப்படியாய்
வாழவைத்த பாவிதேசம் மறக்கவில்லை

படிந்த ஏக்கமுடன்
புதியபாதை தேடுகிறோம் முடிந்தவரை போராடியும் முன்னுரிமை பெறவில்லை

துடிதுடித்து துன்பப்பட்டோம் துரோகச் செயலாலே கடிந்துகொள்ள உறவில்லை
காலம்பதில் சொல்லட்டுமே

விடியும்நாளை வாசகமோ இன்றுவரை விடியவில்லை
முடியுமோ வினாவிற்கு
முற்றுபுள்ளி வைப்பாரில்லை

நன்றி வணக்கம்

கலாதேவி பத்மநாதன்
ஈழத் தமிழர் வளாகம்.
இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading