மனோகரி ஜெகதீஸ்வரன்

சுடர்

திரிதாங்கு சுடரும்
இருளோட்ட உதவும்
பெரிதாகிச் சிறிதாகிப்
பேதமும் காட்டும்

இங்குமங்கும் அலைந்தே
சிறுகாற்றை ஏய்க்கும்
பொங்கிவீசின் சுடரும் பொசுங்கி மாயும்

தொழுவார் முன்னே
சுழன்றாடிச் சுடரும்
பழுது நீக்கிடப்
பரமனைக் காட்டும்

பகலும் இரவும்
பருவம் எதிலும்
நிகழுமே மங்களம்
அமங்கலம்

அதில்வந்து சுடரும்
அமரும் இடம்கண்டு

சுடரை நோக்கின்
சுவறும் ஞானம்
இடரைப் போக்கிட
இயற்றிடு ஒளித் தியானம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading