மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

உலகமெனும் மேடையிலே
உணர்வெனும் காட்சியிலே
உருவங்கள் மாறிமாறி
உன்னதமான நடிப்பன்றோ

அரசியல் மேடையிலே
அள்ளிவிடும் வாக்குறுதிகள்
அளித்துக்கொண்டே சிரிக்கும்
அரசியல்வாதியின் நடிப்பு

மதமென்னும் போர்வையோடு
மனமெல்லாம் இருளோடு
மனிதத்தைப் பிரித்திடும்
மதவாதிகளின் நடிப்பு

நட்பென்னுஞ் சொல்லெடுத்து
நயவஞ்சகச் சிரிப்போடு
நண்பனெனும் போர்வையில்
நடத்திமொரு நடிப்பென்பேன்

எத்தனையோ நடிகரிருப்பினும்
எப்படியான நாடகங்களாயினும்
மனிதத்துவம் மறைந்திடாத
மகத்தான மானிடநடிகருமுண்டு

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading