நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(119) 25/01/24
ஆதங்கம்

என்னவளே,
எனைத் தாங்கும் நல்லவளே
உனக்காக நானும் எனக்காக நீயுமென
வாழ்கின்றோம் ஒன்றாய்

என் துடிப்பால் நீ இயங்க
உன்உழைப்பால் நான் துடிக்க
நீ விடும் மூச்சுக் காற்று இல்லையெனில்
நான்என்று ஒன்றுமில்லை

உழைத்து உழைத்து களைத்து விட்டால்
உன் உடம்பு தளர்ந்திடுமே
அயராது ஓடி ஓடி என்
நாடியும் ஒடுங்கிடுமே

உனக்காகத் துடிக்கின்றேன் நான்
நீ்என்னை வாழ வைப்பாய் என்று
எனக்காக நீயும் உனக்காக நானும்
இருக்கும் வரை வாழ்ந்திடுவோம்
இருந்தாலும் மடிந்தாலும் ஒன்றாகவே

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan