03
Sep
நன்றியாய் என்றுமே..
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
******பாமுகமே வாழி*****
மழலை மொழியில் மகிழ்தமிழ் கானம்//
விழவுகள் பொன்னில் விரும்பும் அரும்பு//
பழந்தமிழ் போற்றிடும் பாமுகம் எம்மில்//
நிழலாய் தொடர நிலைத்து.
பைந்தமிழ் பாமுகப் பார்மகள் தீபமாய்//
வையகம் வாழ்த்திட வான்குன்றில் நின்றொளிர //
மையலும் கொண்டே மயங்கிய மாந்தரும்//
கைகூப்பி நின்றாரே காண்.
நாவலர் பேணிய நற்றமிழை நாளுமே//
தேவரீர் பாமுகம் தேசத்தே காத்திட//
ஆவலால் ஆக்கம் அனுதினம் ஆற்றவே//
பாவலர் போற்றிடப் பாங்கு.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.