வசந்தா ஜெகதீசன்

எழிலே உலகே...

உருளும் உலகே..
வளர்ச்சியின் பாதை வரலாறு
வகை வகை மாற்றத்தில் பல ஏடு
வரம்பென அணையிடும்
தொழில்நுட்பம்
வற்றாத சுரங்கத்தின் புது நுட்பம்

எத்தனை அருவிகள் இணைந்தோடும்
இணையத்தின் சமுத்திரம் சான்றாகும்
இனிவரும் காலத்தின் இணைவிற்குள்
மனிதத்தின் செயல்நிலை குறைவாகும்
இயக்கமே இயந்திரமயமாகும்
வியக்கும் புரட்சியின் எழில் உலகே
விந்தை நிறைந்தெழும் உன் மகிழ்வில்
மொழிவளப் புரட்சியும் பேரழகே
முழுமை உலகையும்
ஒர்குடைக்குள்
நிலைத்துயர் பேறே பெரும் வளமே.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading